/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் குழப்பம்
/
செஞ்சி புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் குழப்பம்
செஞ்சி புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் குழப்பம்
செஞ்சி புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் குழப்பம்
ADDED : ஆக 29, 2024 11:53 PM

செஞ்சி: செஞ்சி புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலைகள் எங்கே செல்கின்றன என்ற அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.66 செஞ்சி வழியாக செல்கிறது. இதில் செஞ்சி நகருக்குள் செல்லாமல் இருக்க திண்டிவனம் சாலையில் பயணியர் விடுதி அருகே துவங்கி திருவண்ணாமலை ரோடு ராஜகிரி மலை அருகே முடிவடைகிறது. இதற்கு இடைபட்ட பகுதியில் மேல்களவாய் சாலை, நாட்டேரி சாலை, சிங்கவரம், கொத்தமங்கலம் மற்றும் செஞ்சி நகரத்திற்கு செல்வதற்கு என நான்கு இடங்களில் ஐந்து சர்வீஸ் சாலைகள் உள்ளன.
இதில் மேல்களவாய் சர்வீஸ் ரோடு வழியாக வேலுார், ஆரணி, சேத்துப்பட்டு செல்வதற்கான சாலையில் இணைகிறது. சிங்கவரம் சாலையில் வடக்கில் உள்ள சர்வீஸ் ரோடு மேல்மலையனுார் செல்வதற்கான சாலையிலும், தெற்கில் உள்ள சர்வீஸ் ரோடு செஞ்சி நகருக்கு செல்வதற்கான சாலையிலும் இணைகிறது. நாட்டேரி சர்வீஸ் ரோடு சாலை சிறுகடம்பூர், நாட்டோரி சாலையில் இணைகிறது. கொத்தமங்கலம் சர்வீஸ் ரோடு கொத்தமங்கலம் சாலையில் இணைகிறது.
இந்த வழியாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கும் ஏராளமான வெளியூர் பயணிகள் வருகின்றனர்.
இவர்கள் திடீரென பிரியும் சர்வீஸ் சாலைகள் எங்கே செல்கின்றன என தெரியாமல் குழப்பமடைந்து வாகனங்களை நிறுத்தி அந்த வழியாக செல்பவர்களிடம் வழி கேட்டுச் செல்கின்றனர்.
எனவே செஞ்சி புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகள் எந்த ஊர்களுக்கு செல்கின்றன என்ற அறிவிப்பு பலகையை வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

