/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி
/
விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி
விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி
விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி
ADDED : மார் 29, 2024 04:52 AM

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் நேற்று நடந்த மனுக்கள் பரிசீலனையில் 31 மனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் 27ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நடந்த பரிசீலனையில், தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ்குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் பங்கேற்றனர்.
தேர்தலில் போட்டியிட 31 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் விபரம்:
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் பகுஜன் சமாஜ் கட்சி - கலியமூர்த்தி, அ.தி.மு.க., பாக்கியராஜ், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி - ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி - களஞ்சியம், பா.ம.க., - முரளி சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி - ரவிக்குமார் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
அதே போல், சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்திருந்த 12 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
இதில், கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 6 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 12 பேர் என 18 மனுக்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை 30ம் தேதி மாலை 3:00 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுகொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் தங்களின் மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துஉள்ளார்.