/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை
/
திண்டிவனத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை
ADDED : மார் 21, 2024 11:53 AM

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் (தனி) சட்டசபை தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சப் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் செலவின பார்வையாளர் சித்தரஞ்சன் தலைமையில் நேற்று நடந்தது. தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணிகள், பறக்கும் படை செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் பறக்கும் படை பிரிவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

