/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு
/
சிறைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு
சிறைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு
சிறைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு
ADDED : மே 03, 2024 10:04 PM

விழுப்புரம், - விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான சிறைகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம்நடந்தது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில், நடந்த கூட்டத்திற்கு, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு மற்றும் அறிவுறுத்தலில் முதன்மைச் செயலர் உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட சிறை, கிளைச் சிறை, செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திண்டிவனம் ஆகிய கிளைச் சிறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, அந்தந்த சிறை கண்காணிப்பாளர்களிடம், கேட்டறிந்து, மேம்படுத்துவது குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நீதிபதிகள் ஹெர்மிஸ், முதன்மைச் சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் மற்றும் சிறை கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.