/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை
/
ஆரோவில்லில் பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை
ஆரோவில்லில் பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை
ஆரோவில்லில் பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை
ADDED : மார் 15, 2025 06:56 AM

வானுார்: விவசாய நிலங்களில் மின் மோட்டார் ஒயர் திருட்டு சம்பவம் தொடர்வதை தடுக்க பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆரோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கிணற்றில் மோட்டார் பம்பு செட் அமைத்து விவசாய பயிர்களுக்கு நீர் இறைக்கப்படுகிறது. இந்த மின் ஒயர்களை மர்ம ஆசாமிகள் வெட்டி திருடிச்செல்வது தொடர்கதையாகவே உள்ளது.
இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று புகார்கள் ஆரோவில் காவல் நிலையத்திற்கு வருகிறது. இதையடுத்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி உத்தரவின் பேரில், ஆரோவில்லில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையில், பழைய இரும்பு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், விவசாய நிலத்தில் தினமும் மின்சார ஒயர் திருடுவதாக புகார்கள் வருகிறது. 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையுள்ள ஒயர்களை அறுத்து எரித்து விற்றால் கூட 500 ரூபாய் தான் கிடைக்கும்.
ஆனால், மீண்டும் ஒயர்களை பொருத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே பழைய இரும்பு கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள், கடைகளில் அவசியம் சி.சி.டி.வி., பொருத்த வேண்டும்.
யாரெல்லாம், கடைக்கு பொருட்களை போடுகிறார்கள் என்ற விபரத்தை சேகரிக்க வேண்டும். சந்தேகப்படும் படி திருட்டு ஒயர்களை எரித்து கொண்டு வந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.