/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கவுன்சிலர்கள் புகார் எதிரொலி; தி.மு.க., நகர செயலாளருக்கு 'டோஸ்'
/
கவுன்சிலர்கள் புகார் எதிரொலி; தி.மு.க., நகர செயலாளருக்கு 'டோஸ்'
கவுன்சிலர்கள் புகார் எதிரொலி; தி.மு.க., நகர செயலாளருக்கு 'டோஸ்'
கவுன்சிலர்கள் புகார் எதிரொலி; தி.மு.க., நகர செயலாளருக்கு 'டோஸ்'
ADDED : செப் 10, 2024 12:25 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் தி.மு.க., நகர செயலாளரின் அடாவடி கமிஷன் செயல் மாவட்ட செயலாளரின் காதுக்கு எட்டியதால் 'செம டோஸ்' விட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நகரமன்ற கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்க வேண்டிய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 16 பேர், கோட்டக்குப்பத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதியை காணச் சென்றனர்.
இதனால், அந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கவுன்சிலர்களில் சிலர், தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணியை நேரில் சந்தித்து, அவர்களின் வார்டுகளில் நகராட்சி மூலம் நடக்கும் பணிகளுக்கான கமிஷனை, நகர செயலாளர் ஒழுங்காக வழங்குவதில்லை. இதுகுறித்து கேட்டால் ஒருமையில் திட்டி அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்ட மாவட்ட செயலாளர், நகர செயலாளரை நேரில் வரவழைத்து 'செம டோஸ்' விட்டுள்ளார். தொடர்ந்து, வார்டுகளில் உள்ள பணிகளை செய்யும் கவுன்சிலர்களுக்கு முறையான கமிஷன் பாரபட்சமின்றி சென்றடைய வேண்டும் என கூறியுள்ளார். இதனால், நகர செயலாளர் கப்சிப்பானார்.