/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
/
அரசு கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
ADDED : ஜூலை 23, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் தொடர்ச்சியாக இளங்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை 25ம் தேதி நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
இளங்கலை பி.காம்., சுழற்சி 1 காலை 10:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 312 முதல் 305 வரை நடக்கிறது. சுழற்சி 2 காலை 10:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 307 முதல் 299 வரை நடக்கிறது.
அனைத்து பாடப்பிரிவுகளிலும் விண்ணப்பித்த பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., முன்னாள் ராணுவம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை 25ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.