/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் கலாசார போட்டிகள்
/
மகளிர் கல்லுாரியில் கலாசார போட்டிகள்
ADDED : செப் 06, 2024 12:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பல்துறை கலாசார போட்டிகள் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, படைப்பாற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வளர்ப்பதில் கலாசார நடவடிக்கைகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றனர். தனி நடனம், தனிப்பாடல், முக ஓவியம், குழு நடனம், தீப்பற்றாத சமையல், மைம், பேஷன் அணிவகுப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவார்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி ஆராய்ச்சிபுல முதன்மையர் கலைமதி வாழ்த்திப் பேசினார். மாணவர் பேரவை நுண்கலை செயலாளர் அகிலா நன்றி கூறினார்.