/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 02, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 45; விவசாயி. கோழிப்பண்ணை உரிமையாளர். இவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது குறித்து விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ஜெயச்சந்திரன், மூன்று தவணைகளாக ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பி வைத்தார். அதன்பிறகு, டிரேடிங் பணத்தை எடுக்க முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.