ADDED : மே 03, 2024 12:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் - செஞ்சி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ேஹால் சேதமாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
விழுப்புரம் - செஞ்சி மெயின் ரோட்டில் பாப்பான்குளம் பகுதி அமைந்துள்ளது.
இந்த சாலையில், செஞ்சி சாலை மார்க்கமாக செல்வோர், சென்னை பைபாசில் இருந்து விழுப்புரம் நகர பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பள்ளி, மசூதி உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிகமாக பயணிக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஒன்றின் மேன்ேஹால் கடந்த சில தினங்களுக்கு முன் சேதமானது.
இது பற்றி, அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. சாக்கடையின் மேன்ேஹால் சேதமாகிய இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சிலர் மரக்கிளைகளை வைத்துள்ளனர்.
இதை உணர்ந்து வாகன ஓட்டிகள் வந்தாலும், ஒரு சிலர் வேகமாக வரும்போது சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
இரவிலும் அங்கு தெரு மின்விளக்கு சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் அந்த சாலையில் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.
செஞ்சி சாலையில் சேதமாகிய பாதாள சாக்கடை மேன்ேஹாலை சரிசெய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.