நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: மத்திய பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரத்துாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட குழு அமுதா, நகர செயலாளர் பால்ராஜ் கண்டன உரையாற்றினர்.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், துணைச் செயலாளர் கபிரியேல், விவசாய சங்க துணைச் செயலாளர் சக்திவேல், ஒன்றிய பொருளாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

