ADDED : ஜூலை 23, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
மயிலம்: பொம்பூர் அடுத்த கோரைக்கேணி கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம மக்கள் மயிலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஐவேலி கிராம தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் செந்தாமரைகண்ணன், முருகன், தமிழக இளைஞர் முன்னணி முத்து முன்னிலை வகித்தனர்.
தமிழ் தேசிய பேரியக்க மாநில துணை பொதுச் செயலாளர் அருணபாரதி, புதுச்சேரி மாநில செயலாளர் வேல்சாமி கண்டன உரையாற்றினர். இதில் கிராம மக்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதி, கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
