தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய்மைப் பணியாளர்கள் தர்ணா

துாய்மைப் பணியாளர்கள் தர்ணா

துாய்மைப் பணியாளர்கள் தர்ணா


ADDED : ஜூலை 23, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நகராட்சி அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 9 கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். காலை உணவாக கலவை சாதம் வழங்குவதை தவிர்த்து, இட்லி, பூரி, பொங்கல் வழங்க வேண்டும்.

உணவை சுகாதாரமற்ற முறையில் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவதால் உடலம் பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சீருடை தையல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us