/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே மேம்பால பணியை முடிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே மேம்பால பணியை முடிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 02:13 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய காவல் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். வி.சி., ஒன்றிய பொருளாளர் அம்பேத்கர், அ.தி.மு.க., யூசூப் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி வரவேற்றார்.
வி.சி., வீராணம் ஆற்றலரசு, காங்., ராதா, தி.மு.க., கதிரவன், ம.தி.மு.க., வீரபாண்டியன், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி பாலமுருகன், பா.ம.க., செல்வராசு, நாம் தமிழர் கட்சி ஜெயவிஷ்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 வழிச்சாலையை கடந்து செல்ல பள்ளிக்கு எதிரே இரும்பினாலான நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளிக்கு எதிரே 1 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள 500 மீட்டர் நீள சர்வீஸ் சாலையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.