/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா
/
பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா
ADDED : மே 24, 2024 05:54 AM
விழுப்புரம்: நுாறு நாள் நாள் வேலை வழங்காத அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் நடந்த தர்ணாவிற்கு, ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தர்ணாவில், 100 நாள் பணி கோரிய மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தினர்.
பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, பணி வழங்குவதாக கூறியதன் பேரில், மதியம் 1.00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.