/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி; விழுப்புரத்தில் மாணவர்கள், பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்பு

ADDED : ஜூன் 30, 2024 11:36 PM

விழுப்புரம்: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் ஆன்லைனின் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதில், பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்தது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2024 என்ற நிகழ்ச்சியில், 'தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை நடைமுறைகள்' பற்றி அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, 'திறன் வளர்ப்பு' குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், கல்வி ஆலோசகர் அஸ்வின் 'கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள்' குறித்தும் விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பித்த ஏராளமான மாணவர்கள், மாணவியர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், 'கட்-ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலைவாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்த சந்தேகங்களுக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் விடை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் மாணவர்கள், பெற்றோர்கள் சென்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் உள்ள சந்தேகங்களை எங்கு கேட்டு தெளிவு பெறுவது என யோசித்த நிலையில் 'தினமலர்' ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக இருந்ததாக பெருமிதத்தோடு கூறினர்.