/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சீருடை வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சீருடை வழங்கல்
ADDED : ஜூலை 30, 2024 11:41 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை கலெக்டர் பழனி வழங்கினார்.
மாவட்டத்தில் 2 மாவட்ட கல்வி சரகங்கள், 13 வட்டார கல்வி சரகங்களின் கீழ், 1,508 பள்ளிகளில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் செயல்படுகிறது.
இந்த பள்ளிகளில் பயின்று மதிய உணவு சாப்பிடும் 1 முதல் 8ம் வகுப்பு வரை 52,153 மாணவர்கள், 53,210 மாணவிகள் உட்பட மொத்தம் 1,05,363 பேர் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு நான்கு செட் விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது.
இதற்கான முதல் செட் சீருடையை மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பழனி வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், சி.இ.ஓ., அறிவழகன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், தொழிற்சங்க கூட்டுறவு அலுவலர் விஸ்வநாதன் உடனிருந்தனர்.

