/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஆக 02, 2024 02:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு. பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு ஜீவானந்தம், கவுன்சிலர் பிரியா பூபாலன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார்
விக்கிரவாண்டி பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணைச் சேர்மன் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசுகையில்,'மாணவர்கள் தவறாமல் பட்டம் இதழை படித்து எதிர்காலத்தில் போட்டி திறன் தேர்வுகளில் வெற்றி பெற்றிட வாழ்த்துகிறேன்' என்றார். பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ராதாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் சேகர், ஊராட்சி தலைவர் பானுப்பிரியா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசினார். ஊராட்சி செயலாளர் சண்முகம், பள்ளி ஆசிரியைகள் தேவகி, புனிதவள்ளி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.