ADDED : ஆக 16, 2024 06:21 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது.
விழுப்புரத்தில் எம்.எஸ்., சிலம்பாட்டக் கழகம், நேருயுவகேந்திரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் பொது நல சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
வெங்கடேஸ்வரா பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தொடங்கி வைத்தார். வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளர் செந்தில்குமார், ஊர்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா, நேருயுவ கேந்திரா சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடந்த சிலம்பாட்ட போட்டியில், சிலம்பம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு ஆகிய பிரிவில், 8 வயது, 12 வயது, 15 வயது, 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளுக்கு, தனித்தனியாக போட்டிகள் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 250 சிலம்ப வீரர்கள் கலந்துகொண்டு, சாகசம் செய்து அசத்தினர். நிறைவாக ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
போட்டிகளை சிலம்பாட்டக்கழக செயலர் சாமிவேல் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

