/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு பிரசாரம்
/
செஞ்சியில் தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு பிரசாரம்
ADDED : ஏப் 05, 2024 11:43 PM

செஞ்சி,: செஞ்சியில் தி.மு.க., வினர் வேட்பாளர் தரணிவேந்தனுக்கு வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.
செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 18வது வார்டுகளில் பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமையில் ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனுக்கு தி.மு.க., வினர் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டனர். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, கடந்த கால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் படி கேட்டுக் கொண்டனர்.
நகர செயாலாளர் கார்த்திக், அவைத்தலைவர் பார்சு துரை, கவுன்சிலர்கள் மோகன், பொன்னம்பலம், சுமித்ரா சங்கர், வழக்கறிஞர் கிருஷ்ணன், காங்., நகர தலைவர் சூரியமூர்த்தி மற்றும் தி.மு.க., கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

