/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஜூன் 24, 2024 06:08 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் சிவா உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யூர் அகரம், சிந்தாமணி, வடகுச்சிபாளையம், கப்பியாம்புலியூர், மண்டபம், பனையபுரம், தொரவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த பிரசாரத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி தி.மு.க., வேட்பாளர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு சேகரித்து பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தொகுதிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் இப்பகுதி மக்களுக்கு செயல்படுத்தியுள்ளார். மேலும் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செய்திட சிவாவிற்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்' என்றார்.
ஜெகத்ரட்சகன் எம்.பி., கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி, வாசன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமாராவ், இளவரசி ஜெயபால், அன்பரசி கோபிநாத், இளைஞரணி அமைப்பாளர் பாரதி, எத்திராசன், கலைச்செல்வன், சுற்றுசூழல் அணி கணேசன், வி.சி., மாவட்ட செயலாளர் திலிபன், ஒன்றிய செயலாளர்கள் வெற்றி வேந்தன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.