/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மாவட்ட செயலாளர் நியமனம் நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
/
தி.மு.க., மாவட்ட செயலாளர் நியமனம் நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
தி.மு.க., மாவட்ட செயலாளர் நியமனம் நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
தி.மு.க., மாவட்ட செயலாளர் நியமனம் நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
ADDED : ஜூன் 12, 2024 02:07 AM

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கவுதமசிகாமணி அறிவித்ததை யொட்டி, காணை ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக டாக்டர் கவுதமசிகாமணி நேற்று அறிவிக்கப்பட்டார். இதையொட்டி, காணை ஒன்றிய தி.மு.க., சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, சேர்மன் கலைசெல்வி ஆகியோர் தலைமையில், காணை பஸ் நிறுத்தம் அருகே நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். , இதில், அவை தலைவர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சிவக்குமார், துணை செயலாளர்கள் செல்வராஜ், கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் குமரன், துணை அமைப்பாளர் மணியரசன், பொருளாளர் மதன், கிளை நிர்வாகிகள் கணேசன், செந்தில்குமரன், கிருஷ்ணா, ராதாமணி, ஊராட்சி தலைவர் ரமேஷ், செயலாளர் இருசன், மகளிரணி ரெஜீனா, நாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.