/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 26, 2025 05:22 AM
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இன்று 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும், சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.