ADDED : பிப் 26, 2025 05:22 AM
திண்டிவனம்: மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார் பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
மாணவரணி துணை அமைப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், லோகநாதன், ஞானசேகரன், மதிவாணன், பொனசீர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் மாசிலாமணி, சேதுநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொருளாளர் ரமணன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பழனி, மணிமாறன், முன்னாள் நகர செயலாளர் கபிலன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.