/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., கிளை செயலாளர் வீட்டில் புடவைகள் பறிமுதல் நடவடிக்கை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கிளை செயலாளர் வீட்டில் புடவைகள் பறிமுதல் நடவடிக்கை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கிளை செயலாளர் வீட்டில் புடவைகள் பறிமுதல் நடவடிக்கை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கிளை செயலாளர் வீட்டில் புடவைகள் பறிமுதல் நடவடிக்கை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2024 12:32 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க., கிளை செயலாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புடவை, வேட்டி, சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, கோலியனுார் ஒன்றியம், ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க புடவைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொகுதி தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று, நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் இளையராஜா தலைமையில் அதிகாரிகள் ராமலிங்கம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த புடவைகள், வேட்டி, சட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதையறிந்த பா.ம.க., நிர்வாகிகள், ஆசாரங்குப்பம் கிராமத்தில் சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகள் உள்ளிட்ட துணிமணிகளை எடுத்து வந்து தெருவில் கொட்டி, கோஷம் எழுப்பினர். தேர்தல் அதிகாரிகள் அந்த புடவைகளையும் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட பா.ம.க., செயலாளர் பாலயோகி தலைமையில் நிர்வாகிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரியும், தி.மு.க., வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி.,கள் சுரேஷ், சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் காணை போலீசார் பா.ம.க.,வினரிடம் பேசி சமாதானம் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்து, பின்னர் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து, பா.ம.க., வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் பழனியை சந்தித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
வழக்குப் பதிவு
விக்கிரவாண்டி தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், ராமலிங்கம் மீது, காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.