/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., முப்பெரும் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
தி.மு.க., முப்பெரும் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 18, 2024 04:19 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க.,முப்பெரும் விழாவையொட்டி, அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க.,முப்பெரும் விழாவை முன்னிட்டு, திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே, விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான் பொது மக்களுக்கு பிளாஸ்க் மற்றும் பிரட் வழங்கினார்.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் டாக்டர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், வழக்கறிஞர்கள் ஆதித்தன், புஷ்பராஜ், கன்னியப்பன், வர்த்தகர் அணி ஆடிட்டர் பிரகாஷ், கவுன்சிலர் பாஸ்கர், நகர துணை செயலாளர் கவுதமன், முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, முன்னாள் துணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.