/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்தில் தீர்வு; டாக்டர் சரவணன் பெருமிதம்
/
இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்தில் தீர்வு; டாக்டர் சரவணன் பெருமிதம்
இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்தில் தீர்வு; டாக்டர் சரவணன் பெருமிதம்
இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்தில் தீர்வு; டாக்டர் சரவணன் பெருமிதம்
ADDED : மார் 08, 2025 03:43 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இ.எஸ்., ஆயுஷ் மருத்துவமனை (கேரள ஆயுர்வேத மையம், சித்தா மற்றும் வர்ம சிகிச்சை மையம், மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம்) உள்ளது.
மருத்துவமனை சிகிச்சை முறை குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் சரவணன் கூறியதாவது:
மருத்துவமனையில் கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, முடக்கு வாதம், பக்கவாதம், பெண்களுக்கான பிரச்சனைகள், உடல் எடை குறைப்பு, தோல் பிரச்னைகளுக்கு இயற்கை முறையில் மருத்துவம் பார்க்கப்படுகிறது.
மேலும் மண் குளியல், ஹைட்ரோதெரபி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, யோகா, தியானம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அதேபோல் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகளும் செய்யப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் அகமருந்து 32 புற மருந்து 32 என 64 சிகிச்சை முறைகள் உள்ளன. இதில் ஒற்றைத் தலைவலி, சைனசைட்டிஸ், குன்மம் (அல்சர்), ஆஸ்துமா, சிறுநீரகக்கல், பித்தப்பை கல், பக்கவாதம், முடக்கு வாதம், கழுத்து வலி, இடுப்பு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகளுக்கு சித்தா வர்ம சிகிச்சைகளான வர்ம அடங்கல், வர்ம தடவு முறையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சரவணன் கூறினார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மோனிஷா, ஆயுர்வேத மருத்துவர் தேவி, சித்தா மற்றும் வர்ம மருத்துவர் வசந்தன், பொதுநலம் மற்றும் மூட்டு வலி மருத்துவர் ஷீலா உடன் இருந்தனர்.