/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கலெக்டர் ஆலோசனை
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 29, 2024 11:54 PM

விழுப்புரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டடத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 1,966 ஓட்டுச்சாவடி மையங்களுக்கான ஏற்புரைகள், ஆட்சேபனை பெறுவது தொடர்பாக வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் பூத் அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடிகளை திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், தனி தாசில்தார் (தேர்தல்) கணேசன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.