/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: தலைமை செயலர் அறிவுரை
/
தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: தலைமை செயலர் அறிவுரை
தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: தலைமை செயலர் அறிவுரை
தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: தலைமை செயலர் அறிவுரை
ADDED : மே 09, 2024 04:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்து, சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தலைமை செயலர் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகள் தீர்ப்பது குறித்து, அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில், தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷிநிகம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம், வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கோடை காலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைகள், அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய குடிநீர் திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
பிறகு, குடிநீர் திட்டங்களை விரைந்து முடித்தும், மாற்று குடிநீர் ஆதாரங்களை செயல்படுத்தி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையின்றி, பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரசரமான குடிநீர் திட்டப்பணிகளை உடனடியாக முடித்து, அரசிடம் அதற்கான நிதியை பெறலாம். நீர் ஆதாரம் உள்ள ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், இல்லாத ஊராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமை செயலர் அறிவுறுத்தினார்.