/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை பொருள் குறித்து விழிப்புணர்வு
/
போதை பொருள் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 08, 2024 12:25 AM

மரக்காணம் : கோட்டக்குப்பத்தில் விக்கிரவாண்டி அதாயி அரபிக் கல்லுாரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோட்டகுப்பத்தில் அதாயி கல்வி குழுமத்தின் விக்கிரவாண்டி கிளை சார்பில் தமிழ்நாடு தன்னார்வலர்கள் இணைந்து போதை இல்லா தமிழ்நாடு திட்டத்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருள் விழிப்புணர்வும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நடந்தது. மேலும் பெற்றோர்களை மதிப்பது குறித்து நிகழ்ச்சியில் பேசப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழ் குழு அறக்கட்டளை நிறுவனர் லெனின் தலைமை தாங்கினார். மனிதம் காப்போம் குழு நிறுவனர் சந்துரு குமார், புதுச்சேரி ரத்ததான முகாம் தன்னார்வளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விக்கிரவாண்டி அதாயி அரபிக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கெண்டனர். நிர்வாகி ஹபீபா அவர்கள் நன்றி கூறினர்.