ADDED : செப் 11, 2024 02:07 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டடம் துவங்கப்பட்டு புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலுார் உட்கோட்டத்தில் சிவில் சப்ளை டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த நந்தகுமார் பணியிட மாறுதலில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, எஸ்.பி., தீபக் சிவாச்சை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில் விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், கஞ்சனுார், கெடார் போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கும்.
புதிய டி.எஸ்.பி.,யை விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.