/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 31ம் தேதி கல்விக் கடன் மேளா
/
விழுப்புரத்தில் 31ம் தேதி கல்விக் கடன் மேளா
ADDED : ஆக 29, 2024 07:56 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் மேளா வரும் 31ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் கீழ் 2024-25ம் கல்வியாண்டிற்கு, மாணவர்கள் உயர்கல்வி பயிலும் பொருட்டு, வங்கியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் கல்விக்கடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக்கடன் மேளா (வங்கியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்) வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதனால், கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு, கல்விக் கடன் மேளா தொடர்பாக தெரிவித்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.