/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் நுண் பார்வையாளர்கள் ஆய்வுக்கூட்டம்
/
தேர்தல் நுண் பார்வையாளர்கள் ஆய்வுக்கூட்டம்
ADDED : ஏப் 16, 2024 07:25 AM
விழுப்புரம், : லோக்சபா தேர்தலை யொட்டி, தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
ஒவ்வொரு தேர்தல் நுண் பார்வையாளர்களும், ஓட்டுச்சாவடி முகவர்களின் இருப்பு, அவர்கள் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களை கடைபிடித்திட வேண்டும்.
தேர்தல் ஆணைய வழிகாட்டு முறைகளின்படி, வாக்காளர்களை சரியான முறையில் அடையாளம் காண வேண்டும்.
மாதிரி ஓட்டெடுப்பு முடிந்தவுடன் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இருந்து மாதிரி ஓட்டெடுப்பின் தரவு அழிக்கப்பட்டு உண்மையான ஓட்டெடுப்பு துவங்கும் முன் மின்னணு இயந்திரங்களில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை பூஜியமாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு சரியான நேரத்தில் முடிவதை உறுதி செய்வது, ஒவ்வொரு ஓட்டு சாவடிகளிலும் அனுமதி வழங்கிய முகவர்கள் தான் ஓட்டுச்சாவடியில் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு தொடர்பான அறிக்கையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் அலுவலர் பழனி பேசினார்.
டி.ஆர்.ஒ., பரமேஸ்வரி, சப்கலெக்டர் திவ்யான்சு நிகாம், பெரியசெவலை கூட்டுறவு சக்கரை ஆலை மேலாண் இயக்குனர் மீனா உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

