/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக சேவகர் விருது பெற தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
/
சமூக சேவகர் விருது பெற தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
சமூக சேவகர் விருது பெற தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
சமூக சேவகர் விருது பெற தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 30, 2024 05:02 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுகளை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை முதல்வர் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு தகுதியுடையோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து பொதுமக்களுக்கு தொண்டாற்றிய வகையில் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். இந்த விருதுக்கு தகுதியானோர், தமிழக அரசின் விருதுகள் இணையதளம் https://awards.tn.gov.in வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வரும் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.