ADDED : ஆக 29, 2024 07:54 AM
விழுப்புரம்: செஞ்சி ரங்கபூபதி கலை அறிவியல் கல்லுாரியில் ஆக., 31ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா வேலை வாய்ப்பு முகாம், செஞ்சி ரங்கபூபதி கல்லுாரியில் ஆக., 31ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பழனி தலைமையில், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சார்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 18 முதல் 40 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம். கல்வித் தகுதி 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை.
இந்த முகாமில் கலந்துகொள்பவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும். மேலும் தகவலுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தை 04146 - 223736 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

