/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய சாதனங்களை உருவாக்கி இன்ஜினியரிங் மாணவர்கள் சாதிக்கலாம்: பல்கலை., இயக்குநர்
/
புதிய சாதனங்களை உருவாக்கி இன்ஜினியரிங் மாணவர்கள் சாதிக்கலாம்: பல்கலை., இயக்குநர்
புதிய சாதனங்களை உருவாக்கி இன்ஜினியரிங் மாணவர்கள் சாதிக்கலாம்: பல்கலை., இயக்குநர்
புதிய சாதனங்களை உருவாக்கி இன்ஜினியரிங் மாணவர்கள் சாதிக்கலாம்: பல்கலை., இயக்குநர்
ADDED : செப் 05, 2024 05:36 AM

விழுப்புரம்: அனைத்து துறைகளுக்கும் தேவையான புதிய சாதனங்களை உருவாக்கி, இன்ஜினியரிங் மாணவர்கள் தான் சாதிக்க முடியும் என்று அண்ணா பல்கலை., இயக்குநர் தெரிவித்தார்.
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள் சங்கர், ராமச்சந்திரன், ரீகன் முன்னிலை வகித்தனர்.
அண்ணா பல்கலை., இயக்குனர் ஹரிஹரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: அண்ணா பல்கலை., கல்லூரியை தேர்வு செய்த அனைத்து மாணவர்களையும் வரவேற்கிறோம். இன்ஜினியரிங் படிப்புக்கு ஆங்கிலம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். எதிர்கால வேலை வாய்ப்புக்கும், பிளேஸ்மெண்ட், குழு டிஸ்கர்ஷன் போன்றவற்றுக்கும், ஆங்கிலம் அவசியமாகும்.
புத்தகம் மட்டுமே உள்ள பள்ளி படிப்பை முடித்து வந்திருக்கிறீர்கள். இன்ஜினியரிங் படிப்பு, புத்தகத்தில் இல்லாத 90 சதம் கேள்விகள் வெளியிலிருந்து தான் கேட்கப்படும். இதனால், ஆன்லைனில், நூலகங்களில் படிக்க வேண்டும், புத்தகத்தை மட்டுமே படித்தால் போதாது, பலவற்றையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். டாக்டராக நினைத்தேன் என்பதெல்லாம் விட, சிறந்த படிப்பு இன்ஜினியரிங் தான். ஏனென்றால், பல துறைக்கும் தேவையான உபகரணங்கள், புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்துக் கொடுப்பது இன்ஜினியரிங் வேலை. புதியவற்றை நீங்கள் கண்டுபிடித்து சாதிக்கலாம்.
படிப்புக்கு பிறகு, அரசு மற்றும் தனியார் வேலையும், தொழில் முனைவராகவும் உருவாகலாம். இதற்கெல்லாம் அடிப்படை அறிவை இங்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக செல்போன், டி.வி., பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், இன்ஜி., தேவையும் அதிகரிக்கிறது என்று பேசினார்.
இதில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.