/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : மார் 01, 2025 05:59 AM

விழுப்புரம், : தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கண்காட்சியை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து துவக்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், சோலார், மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் மாற்று பொருள், மாடிதோட்டம், மூலிகை தோட்டம் என பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 8,000, மூன்றாம் பரிசு 7,000 ரூபாய் ஆறுதல் பரிசு 2 பள்ளிகளுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் தலா 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன், வனத்துறை உயிரியியலாளர் லக்ஷனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.