ADDED : ஆக 11, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ., சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விக்கிரவாண்டி தாலுகா, மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 55; கொட்டியாம்பூண்டி கிராம வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வந்தார். வலிப்பு நோயால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு வீட்டிலிருந்த போது வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.