/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
/
இ.எஸ்., கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
ADDED : ஆக 10, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் மன்னேஸ்வரி முன்னிலை வகித்தார். மாணவி பவானி வரவேற்றார். தாவரவியல் துறை, உயிரி தொழில் நுட்பவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் சுசீந்திரன் 'உயிரி தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்' தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை உதவி பேராசிரியர் ராஜசேகரன் ஒருங்கிணைத்தார். மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.