/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாஜி படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாஜி படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாஜி படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாஜி படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 28, 2024 11:06 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஏப்.19ம் தேதி நடைபெறயிருக்கும், லோக்சபா தேர்தலில் 60 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலர்களாக பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக, திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்பு பணிபுரிவதற்கான விருப்பம் தெரிவிக்க, உடனடியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு, அசல் படைப்பணிச்சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி, பெயர் பதிவு செய்து கொள்ளவும்.
சி.எஸ்.டி கேண்டீனில், வேலை நாட்களில் பெயர் பதிவு செய்யப்படும். இதற்கான பதிவு தற்போது நடக்கிறது. விடுமுறை நாட்களிலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04146 -220524 மூலம், காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
படைப்பணியினை விட்டு வெளிவந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு, தேர்தல் பணிக்காலத்தில் பணிபுரிய உரிய ஊதியம் வழங்கப்படும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தெரிவித்துள்ளார்.

