/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்வு முடிவுகள் உங்கள் பயணத்தின் முடிவல்ல சுகாதார நிபுணர் நிஷாந்த் அறிவுரை
/
தேர்வு முடிவுகள் உங்கள் பயணத்தின் முடிவல்ல சுகாதார நிபுணர் நிஷாந்த் அறிவுரை
தேர்வு முடிவுகள் உங்கள் பயணத்தின் முடிவல்ல சுகாதார நிபுணர் நிஷாந்த் அறிவுரை
தேர்வு முடிவுகள் உங்கள் பயணத்தின் முடிவல்ல சுகாதார நிபுணர் நிஷாந்த் அறிவுரை
ADDED : மே 07, 2024 05:36 AM
விழுப்புரம் : பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் விரக்தி, எதிர்மறை எண்ணங்களுக்கு ஆளாக வேண்டாம். எந்த சவால்களையும் சமாளிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என விழுப்புரம் பொது சுகாதாரத்துறை நிபுணர் டாக்டர் நிஷாந்த் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த முடிவுகளை அடையாதவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். இது உங்கள் பயணத்தின் முடிவு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பிரகாசிக்க ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
குறைந்த மதிப்பெண்களைக் கண்டும் விரக்தியடைய வேண்டாம். மாறாக, பெரிய வெற்றியை நோக்கிய படிக்கற்களாக அவற்றை பார்க்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் படிப்புகள் முதல் அலைட் ஹெல்த் சயின்சஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் அதற்கு அப்பாலும் நீங்கள் ஆராய்ந்து படிப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.
வெற்றி என்பது மதிப்பெண்களால் மட்டுமே வரையறுக்கப்படவில்லை. உங்கள் உண்மையான ஆற் றல், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கற்றுக்கொள்ள விருப்பம் ஆகியவற்றில் தான் உள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்து, விமர்சனத்திற்கு பதிலாக, அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
நேர்மறை மற்றும் நெகிழ்ச்சி தன்மையை நோக்கி அவர்களை வழி நடத்துங்கள். அவர்கள் எந்த தடைகளையும் கடக்கும் வலிமையை கண்டுபிடிப்பார்கள்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், விரக்தி அல்லது எதிர்மறை எண்ணங்களுக்கு ஆளாக வேண்டாம்.
உங்களுக்கு உதவி, ஆலோசனை தேவைப்பட்டால், இலவச 104 ஹெல்ப் லைன் தொடர்பு கொண்டு பேசினால், எந்த சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள்.
உங்களை நம்புங்கள், ஏனென்றால் உன்னதத்தை அடையும் சக்தி உங்களுக்குள் உள்ளது.
இவ்வாறு நிஷாந்த் கூறினார்.