/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறுந்தேர்வுகள், பயிற்சியினால் தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது: விழுப்புரம் சி.இ.ஓ., பெருமிதம்

ADDED : மே 10, 2024 09:25 PM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் குறுந்தேர்வுகள் மற்றும் பயிற்சி அளித்ததால் தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததாக சி.இ.ஓ., அறிவழகன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் கூடியதற்கு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் காரணம். காலை, மாலை சிறப்பு வகுப்புகள், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறுந்தேர்வுகள். மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், தேர்வுகள் பல வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டரின் ஆலோசனைப்படி, அடிக்கடி கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடத்தி, அவர் வழங்கிய அறிவுரையும் முக்கிய காரணமாகும். வரும் கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த ஆண்டு, டி.இ.ஓ., தலைமை ஆசிரியர்கள் இணைந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, தேர்வு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
தொடர்ந்து வாராந்திர குறுந்தேர்வுகள் நடத்தப்படும். அதற்காக, மாவட்டம் முழுதும் ஒரே கேள்வித்தாள் தயாரித்து, பள்ளிகளில் தேர்வு நடத்தப்படும். கேள்வித்தாள் முதல் நாளில் மாணவர்களுக்கு வழங்கி, மறுநாள் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுத்தப்பட்டு, தேர்ச்சி விகிதமும் மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.