/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'வாட்ஸ் ஆப்'பில் தகவல் தெரிவிக்கும் மா.செ., கூட்டங்களை புறக்கணிக்கும் நிர்வாகிகள்

ADDED : ஆக 13, 2024 06:26 AM
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் புதிய மாவட்ட செயலாளர் கட்சி நிர்வாகிகளிடம் சரிவர தொடர்பில் இல்லாததால் கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளராக மஸ்தான் பதவி வகித்து வந்தார். அவர் மீதும், அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் அடுத்தடுத்து வந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மஸ்தானிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இருப்பினும் அவரது ஆதரவாளரான சேகருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சேகர் வகித்து வந்த அவைத் தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சேகர் சில தினங்களுக்கு முன் மாவட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டினார். அதனைத் தொடர்ந்து, அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின்கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
இதற்காக மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாட்ஸ் ஆப் மூலம் மாவட்ட செயலாளர் சேகர் தகவல் அனுப்பினார்.
தொலைபேசி வாயிலாக கூட அழைப்பு விடுக்காமல் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்ததால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் நடத்திய இரண்டாவது கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியை மாவட்ட செயலாளர்பெற்றுள்ளார்-நமது நிருபர்-.