/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் ஊராட்சியில் கண் சிகிச்சை முகாம்
/
வானுார் ஊராட்சியில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூன் 15, 2024 06:19 AM

வானுார்: ஆரோவில் கிராம செயல் வழிக்குழு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வானுார் ஊராட்சியில் நடந்தது.
முகாமை ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இயக்குனர் ஜெரால்டு மோரீஸ், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், கவுன்சிலர் சசிகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
துணைத் தலைவர் ஜெயகோபால், வார்டு உறுப்பி னர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ராகவன் தலைமையில் மருத்துவக் குழுவினர், பொது மக்களுக்கு கண் சிகிச்சை அளித்தனர்.
கண்ணில் நீர் வடிதல், கண் புரை உள்ளிட்ட நோய் களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 210 பேர் பயனடைந்தனர்.
இதில் 26 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.