ADDED : ஜூன் 16, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ஏழுமலை, 33; இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இவரது மனைவி கோபித்துகொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இச்சம்பவத்திற்கு தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித், 40; என்பவர் தான் காரணம் என ஏழுமலை தனது சகலை இந்திரஜித்திடம் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இந்திரஜித் மற்றும் அரசன் என்பவரும் ஏழுமலையை தாக்கினர்.
இது குறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் இந்திரஜித், 40; அரசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து இந்திரஜித்தை கைது செய்தனர்.