ADDED : மே 12, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் மனைவி துர்கா, 26; இருவரும் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.
கவுதம் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த துர்கா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.