/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர்க் கடனை திரும்ப செலுத்த ஓராண்டு அவகாசம் தேவை விவசாயிகள் கோரிக்கை

ADDED : மார் 09, 2025 03:37 AM

விழுப்புரம் : கூட்டுறவு சங்க பயிர்க் கடனை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் விஜயகீர்த்தி மற்றும் நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கடன்களை 6 மாதத்தில் பைசல் செய்ய வேண்டும் என கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.
வேலுார் மாவட்டத்தில், விவசாயிகள் கூட்டுறவு வங்கி மூலம் பெற்ற பயிர் கடனை ஆண்டுக்கு ஒரு முறை பைசல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட விவசாயிகளுக்கும் சலுகை வழங்கக் கோரி, தொடர்ந்து மனு அளித்து வருகிறோம்.
தமிழகம் முழுதும், கூட்டுறவு சங்க பயிர்க் கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு காலமாக நீடிப்பு வழங்கிட, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.