ADDED : ஆக 21, 2024 06:49 AM

விழுப்புரம் : விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., (பொறுப்பு) தமிழரசன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் வசந்தகிருஷ்ணன், ராஜ்குமார், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் மற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம், வானுார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையொட்டி, ஏரி, நீர்வரத்து வாய்கால்களை துார்வார வேண்டும். தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க வேண்டும். விதை நெல் தட்டுப்பாடு நிலவுகிறது. பட்டா மாற்றத்தை விரைந்து வழங்க வேண்டும்.
தரமான விதைகளை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் விரைவாக விசாரணை செய்து, தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.

