ADDED : செப் 17, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, : மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த திருவதிகுன்னம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகள் ஹரிணி,20; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், கடந்த 15ம் தேதி காலை 6.30 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.