/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி பின்னால் கார் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி
/
லாரி பின்னால் கார் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி
ADDED : ஆக 20, 2024 04:38 AM

திண்டிவனம்: சென்னை, கிண்டி லேபர் காலனியை சேர்ந்தவர் ரத்தினசாமி, 77. இவரது மகன்கள் வேல்முருகன், 45, சென்னைப் பல்கலை; ரமேஷ், 40, சென்னை விமான நிலையத்திலும் பணியாற்றுகின்றனர். சேலம் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினசாமியை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு வேல்முருகன், ரமேஷ் ஆகியோர், மாருதி சுசூகி காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலையில் நத்தமேடு அருகே வந்தபோது, முன்னால், அரியலுாரில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி, சென்னை சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால், வேல்முருகன் ஓட்டிச் சென்ற கார் மோதியது. அதில், காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது; மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.
தகவலறிந்த திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று, மூவரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். செல்லும் வழியில் ரத்தினசாமி, ரமேஷ் இறந்து விட்டனர். வேல்முருகன் சிகிச்சை பெறுகிறார்.
காரை ஓட்டி வந்த வேல்முருகன் துாக்க கலக்கத்தில், லாரியின் பின்னால் மோதி இருக்கலாம் என கூறப்படுகிறது.

